Saturday, July 9, 2011

பூண்டு குழம்பு




தேவையான பொருட்கள்
  • சின்ன வெங்காயம் - 20 பல்  
  • பூண்டு - 20 பல் 
  • தக்காளி - 1
  • மல்லித்தூள் - 2 ஸ்பூன் 
  • மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
  • புளி - நெல்லிக்காய் அளவு 
  • நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி 
  • வெல்லம் - ஒரு சிறு துண்டு 
தாளிக்க :
  • கடுகு - 1 ஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு 
  • வெந்தயம் - 1 /2 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிது
செய்முறை : 
  1.  கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச்  சேர்த்து தாளிக்கவும். 
  2. பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. அதன் பிறகு மஞ்சள்தூள்,  மிளகாய் தூள் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  4. புளி கரைசல் கெட்டியாக சேர்த்து கொதிக்க விடவும்.
  5. இறுதியாக வெல்லம் ஒரு சிறு துண்டு சேர்த்து கொள்ளவும். 


Thursday, July 7, 2011

ராஜ்மா கிரேவி


தேவையான பொருட்கள் 
  • வெங்காயம் - 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • தக்காளி - 3 (அரைத்தது)
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை - 1
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் காராமணியை வேகவைத்து கொள்ள வேண்டும் .
  2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  3. பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
  4. பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  5. பின்னர் வேக வைத்துள்ள காராமணியை லேசாக மசித்து, வாணலியில் ஊற்றி, சற்று கெட்டியான கிரேவி போன்று வரும் போது இறக்கி வைக்க வேண்டும். 

Tuesday, July 5, 2011

வெண் பொங்கல்





தேவையான பொருட்கள்
  • பச்சை அரிசி - 3/4 கப்
  • பாசிப்பருப்பு  - 1/4 கப்
  • தண்ணீர் - 4 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • நெய்  - 1/2 டீஸ்பூன்
  • மிளகு  - 2 டீஸ்பூன்
  • முந்திரி  - 15
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • இஞ்சி - 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை
  1. முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  2. வறுத்த பாசிப்பருப்பும், அரிசி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய், கடுகு, சீரகம், மிளகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். 
  4. இதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து தண்ணீர், உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து நெய் விட்டு வறத்த முந்திரியை இதில் போட்டு கிளறி விடவேண்டும்.
  5. ருசியான வெண்பொங்கல் தயார்.இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.
வெண்பொங்கலுக்கு தேங்காய் சட்னி,  சாம்பார் சுவையாக இருக்கும். 



Wednesday, May 4, 2011

பருப்பு உருண்டை குழம்பு



தேவையான பொருள்கள் :

உருண்டைக்கு : 
  • கடலை பருப்பு - 1 கப்
  • துவரம் பருப்பு - 1 கப்
  • சோம்பு - 1 டீஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் 
  • பெரிய வெங்காயம் - 2
  • உப்பு - தேவையான அளவு
குழம்புக்கு : 
  • சின்ன வெங்காயம் - 15
  • தக்காளி - 2
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • சோம்பு - 1/2 டீஸ்பூன் 
  • சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்) - 1 டேபிள் ஸ்பூன் 
  • கடுகு - 1/2 டி ஸ்பூன் 
  • வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 
  • பூண்டு - 5 பல் 
  • கறிவேப்பிலை - 1 கொத்து 
  • புளி - நெல்லிக்காய் அளவ
செய்முறை : 
  •  சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  •  கடலை பருப்பை  மற்றும் துவரம் பருப்பை நன்றாக கழுவி   இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில்   காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு  சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்  பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.
  •  கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை  வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து  நன்றாக வதக்கி ஆற விடவும்.
  •  நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து  மிக்ஸ்யில் அரைக்கவும். 
  • அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து   கொள்ளவும்.
  • மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  •  பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான   தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும்  கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

Sunday, May 1, 2011

வெஜிடபுள் பிரியாணி

தேவையானவை
    • வெங்காயம் -2
    • தக்காளி - 3
    • பூண்டு- 6பல்
    • இஞ்சி - 1 துண்டு
    • புதினா - ஒரு கைப்பிடி
    • கறிவேப்பில்லை - ஒரு கைப்பிடி
    • கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    • எண்ணெய் - 1 குழி கரண்டி 
    • நெய் - 1 ஸ்பூன் 
    • பச்சை மிளகாய்  - 2
    • கேரட்
    • பீன்ஸ்
    • காலி பிளவர் 
    • குடை மிளகாய்
    • உருளை கிழங்கு
    • பச்சை பட்டாணி - 1 கப் 
    • மீள் மேக்கர் - 1 கைப்பிடி
    • பட்டை
    • லவங்கம்
    • பிரிஞ்சி இலை  
    • கச கச
    • பாஸ்மதி அரிசி - 2 கப் 
    • மஞ்சள் தூள் -1 ஸ்பூன் 
    • கரம்மசாலா - 1 ஸ்பூன்
    • உப்பு - தேவைகேற்ப
    • எழுமிச்சம் பழம் - 1/2 
    • தயிர் - 2 ஸ்பூன் 
      செய்முறை

      1. முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும்.
      2. பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய வைத்து பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, அத்துடன் வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
      3. பிறகு, நறுக்கிய காய்கறிகளை அத்துடன் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
      4.  காய்கறி நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, தயிர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
      5. அடுத்து ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் அதில் சேர்க்க வேண்டும். 
      6. பின்னர், குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான வெஜிடேபிள் பிரியாணி தயார்.





      Tuesday, April 26, 2011

      ஜீரா ரைஸ்


        

      தேவையானபொருட்கள்
      • பாஸ்மதி அரிசி - 1 கப்
      • சீரகம் - 11/2 டீஸ்பூன்
      • வெங்காயம் - 1
      • பச்சை மிளகாய் - 4
      • இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
      • முந்திரிப் பருப்பு - 10
      • நெய் - 2 டேபிள்ஸ்பூன்
      • ஏலக்காய் - 2
      • கிராம்பு - 2
      • பட்டை - 1 துண்டு
      • உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
      • தேங்காய்ப்பால் - 1 கப்
      • தண்ணீர் -     தேவையான அளவு

      செய்முறை
      1. வெங்காயத்தை நறுக்கி கொ்ளவும்.
      2. பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
      3. பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
      4. முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
      5. ஒரு குக்கரில் நெய்யை சூடாக்கி அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.
      6. பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
      7. பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசியையும் வதக்கி தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு சேர்த்து 1 முதல் 2 விசில் வரை வேக விடவும்.
      8. பின் குக்கரைத் திறந்து வறுத்து வைத்துள்ள முந்திரி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

      Thursday, March 10, 2011

      உருளை கிழங்கு பால்கறி

      தேவையானபொருட்கள் 
      •     பெரிய வெங்காயம் -1 
      •     எண்ணெய்  - தாளிப்பதற்கு 
      •     கடுகு , உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை  
      •     பட்டை ,கிராம்பு 
      •     பச்சை மிளகாய் - 1        பூண்டு - 3 பல் 
      •      சோம்பு - சிறிதளவு
      •      தக்காளி - 1 
      •      தேங்காய் துருவல் 
      •      பெரிய உருளை கிழங்கு - 2
      •      உப்பு - தேவைகேற்ப 
      •      மஞ்சள்தூள் - சிறிதளவு

         செய்முறை

      1. தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு போன்றவற்றை நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.
      2. வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு  மற்றும்  கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 
      3. பிறகு வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
      4. அரைத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
      5. இறுதியாக உருளைகிழங்கை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
      6. கொதித்தவுடன் பரிமாற உருளைகிழங்கு பால்கறி ரெடி.

      Monday, February 14, 2011

      கார பணியாரம்



      தேவையானபொருட்கள்  
      • வெங்காயம் நறுக்கியது - 1/2 கப் 
      •  புளித்த இட்லி மாவு - 4கப் 
      •  பச்சைமிளகாய் நறுக்கியது - இரண்டு
      •  கடுகு சீரகம் கலந்தது - ஒரு தேக்கரண்டி
      •  உளுத்தம்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
      •  கடலை பருப்பு  - இரண்டு தேக்கரண்டி
      •  கொத்தமல்லி நறுக்கியது - ஒரு மேசைக்கரண்டி
      •  எண்ணெய் - தேவையான அளவு 
      •  வெங்காயம் நறுக்கியது - அரைக்கோப்பை
      •  பச்சைமிளகாய் நறுக்கியது - இரண்டு
      •  கடுகு சீரகம் கலந்தது - ஒரு தேக்கரண்டி
      •  உளுத்தம்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
      •  கடலை பருப்பு  - இரண்டு தேக்கரண்டி
      •  கொத்தமல்லி நறுக்கியது - ஒரு மேசைக்கரண்டி
      •  எண்ணெய் - தேவையான அளவு 
          
      செய்முறை 

      1. கடாயில் எண்ணெய்  ஊற்றி கடுகு, சீரகம் ,  உளுந்தம் பருப்பு  கடலை பருப்பை லேசாக சிவக்க வறுக்கவும்.
      2. பிறகு வெங்காயம் , கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
      3. இதனை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
      4. குழி பணியார சட்டியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு முக்கால் அளவு மாவினை ஊற்றவும்.
      5. பிறகு மெல்லிய கம்பியில் பணியாரத்தை திருப்பி விடவும்.
      6. திருப்பிய பக்கமும் சிறிது எண்ணெய் விடலாம் வேண்டுமானால் இரு புறமும் நன்றாக சிவக்க எடுத்தால் கார பணியாரம் ரெடி.

      Thursday, January 27, 2011

      கேசரி

      தேவையானபொருட்கள்
      • ரவை -100 கிராம் (ஒரு பங்கு)
      • சர்க்கரை - 100 கிராம் (ஒரு பங்கு)
      • தண்ணீர் - முன்று பங்கு 
      • முந்திரி -  தேவையானவை
      • நெய் - தேவையானவை     
      • கேசரி பவுடர் - தேவையானவை     
      செய்முறை 
      1. முதலில் ரவையை லேசாக வறுத்து கொள்ளவும்,
      2. முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும் 
      3. கேசரி பௌடரை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும் 
      4. பிறகு அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் மற்றும் கரைத்து வைத்துள்ள கேசரி பௌடரை சேர்த்து  கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ரவையை சிறிது சிறிதாக கொட்டி ரவா கட்டிகள் ஏற்படாமல் கிளறவும் 
      5. சிறிது நேரம் கழித்து ரவை வெந்தவுடன் சீனியை சேர்த்து கிளறவும் 
      6. சீனி கரைந்து ரவாவுடன் நன்கு சேரும் வரை கிளறிவிட்டு வேகவிடவும். 
      7. பிறகு முந்திரியை சேர்த்து கிளறவும் 
      8. தேவைகேற்ப நெய் சேர்க்கலாம்.
       முந்திரி துண்டங்கள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

      தக்காளி சாதம்

      தேவையான பொருட்கள்:
      • தக்காளி  -  8     
      • பெரிய  வெங்காயம்  -  4
      • பச்சை   மிளகாய்  -  4  
      • வரமிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
      • அரிசி  -  2 கப்
      • பூண்டு - 5 பல்
      • இஞ்சி  - தேவைகேற்ப
      • பட்டை, கிராம்பு - தேவைகேற்ப
      • பிரிஞ்சி இலை - 1
      • எண்ணெய் - 2 ஸ்பூன்  
      • நெய்  - தேவைகேற்ப
      • கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி தழை- 1 கை பிடி
      • உப்பு - தேவைகேற்ப
      செய்முறை
      1.  சாதத்தை உதிரியாக வடித்துகொள்ள வேண்டும் 
      2.  கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை கிராம்பு சேர்த்து   கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு சேர்த்து   வதக்கவும் 
      3. பிறகு வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும் 
      4. பச்சைமிளகாய் மற்றும் வரமிககை தூள் சேர்த்து வதக்கவும்
      5. தேவையான  உப்பு சேர்க்கவும்
      6. நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
      7.  பிறகு இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.
      • தயிர் பச்சடியுடன் சாப்பிட  சுவையாக இருக்கும்.