தேவையானவை
- வெங்காயம் -2
- தக்காளி - 3
- பூண்டு- 6பல்
- இஞ்சி - 1 துண்டு
- புதினா - ஒரு கைப்பிடி
- கறிவேப்பில்லை - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- நெய் - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கேரட்
- பீன்ஸ்
- காலி பிளவர்
- குடை மிளகாய்
- உருளை கிழங்கு
- பச்சை பட்டாணி - 1 கப்
- மீள் மேக்கர் - 1 கைப்பிடி
- பட்டை
- லவங்கம்
- பிரிஞ்சி இலை
- கச கச
- பாஸ்மதி அரிசி - 2 கப்
- மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
- கரம்மசாலா - 1 ஸ்பூன்
- உப்பு - தேவைகேற்ப
- எழுமிச்சம் பழம் - 1/2
- தயிர் - 2 ஸ்பூன்
செய்முறை
- முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும்.
- பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய வைத்து பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, அத்துடன் வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
- பிறகு, நறுக்கிய காய்கறிகளை அத்துடன் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
- காய்கறி நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, தயிர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
- அடுத்து ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் அதில் சேர்க்க வேண்டும்.
- பின்னர், குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான வெஜிடேபிள் பிரியாணி தயார்.
No comments:
Post a Comment