Monday, December 26, 2011

முருங்கை கீரை பொரியல்



தேவையான பொருட்கள் 
  • நல்ல எண்ணெய் – 2½ ஸ்பூன்
  • முருங்கை கீரை - 1 கட்டு 
  • சீரகம் - 1 ஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
  • கடுகு – ½ ஸ்பூன
  • உளுந்தம் பருப்பு – 1½ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (பெரியது)
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • தேங்காய் துருவல் - சிறிதளவு 
செய்முறை 
  1. முதலில் முருங்கைக் கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். 
  2. அலசிய முருங்கைக் கீரையைப் போட்டு அதனுடன் சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். 
  3. வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, ஊளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும். 
  4. தண்ணீர் வற்றி முருங்கைக் கீரை சுருள வதங்கியதும் அடுப்பினை அணைத்து விடவும்.
  5. அதனுடன் துருவிய தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி விடவும். 
சுவையான முருங்கைக் கீரை பொரியல் தயார்.

உடலில் உள்ள இரும்பு சத்தின் அளவை அதிகப்படுத்தி கொடுக்கும் .













No comments:

Post a Comment