தேவையான பொருட்கள்
- கேரட் - 4 துருவியது
- சின்ன வெங்காயம் - 8
- வர மிளகாய் - 2
- கடலை பருப்பு - 1 ஸ்பூன்
- புளி - 1 ஸ்பூன்
- இஞ்சி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து , 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
- பிறகு மற்றோரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , கடலை பருப்பு , வர மிளகாய் , புளி மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின்பு வதக்கி வைத்துள்ள பொருட்கள் குளிர்ந்ததும், அவற்றை மிஸ்யில் போட்டு அத்துடன், உப்பு, இஞ்சி, மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும் .
- பிறகு தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு , உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை , மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment