Monday, December 26, 2011

வாழைத்தண்டு பொரியல்




தேவையானவை
  • வாழைத்தண்டு - 1 அடி
  • வெங்காயம்  - 1 
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • கறிவேப்பிலைசிறிது
  • உப்பு - தேவைக்கேற்றவாறு
  • மஞ்சள் தூள் - 1ஸ்பூன் 
  • தேங்காய் பூ - சிறிதளவு    
செய்முறை 
  1. வாழைத்தண்டு முதலில் பொடியாக நறுக்கி கொண்டு , கடாயில்  எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் கடுகு , உளுத்தம் பருப்பு , காய்த்த மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும் . 
  2.  பின் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டுடன் , மஞ்சள் தூள் , உப்பு  சேர்த்து வதக்கவும்.
  3. வாழை தண்டு வெந்து முற்றிலும் தண்ணீர் வற்றிய பிறகு தேங்காய் பூ சேர்த்து வதக்கி இறக்கினால் வாழை தண்டு பொரியல் தயார் .
சிறுநீரக கற்கள் விரைவில் கரையும்.




No comments:

Post a Comment