தேவையான பொருட்கள்
- பச்சை அரிசி - 3/4 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- தண்ணீர் - 4 கப்
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1/2 டீஸ்பூன்
- மிளகு - 2 டீஸ்பூன்
- முந்திரி - 15
- சீரகம் - 1 டீஸ்பூன்
- இஞ்சி - 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- வறுத்த பாசிப்பருப்பும், அரிசி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய், கடுகு, சீரகம், மிளகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.
- இதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து தண்ணீர், உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து நெய் விட்டு வறத்த முந்திரியை இதில் போட்டு கிளறி விடவேண்டும்.
- ருசியான வெண்பொங்கல் தயார்.இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.
No comments:
Post a Comment