Tuesday, December 27, 2011

வாழைக்காய் புளி வறுவல்


தேவையானவை

  • வாழைக்காய் - 1 
  • எண்ணெய் - தாளிப்பதற்கு 
  • கடுகு - 1/2  ஸ்பூன் 
  • உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை 
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  • பூண்டு - 2 பற்கள் 
  • சோம்பு - 1 
  • வறமிளகாய் - 1 ஸ்பூன்
  • கரம் மசால - 1 ஸ்பூன் 
  • புளி - நெல்லிக்காய் அளவு

செய்முறை 

  • வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • பூண்டு, சோம்பு, வறமிளகாய், கரம் மசாலா, புளியை சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளவும்.  
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி  கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும.
  • பிறகு வாழைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும். 
  • வதக்கியவுடன் அரைத்து வைத்த பேஸ்ட்டை வாழைக்காயுடன் சேர்த்து நன்றாக பிரட்டவும். 
  • மிதமான தீயில் 5 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து, பிறகு நன்கு கிளறிவிடவும். 
  • காய் பொன்னிறமாக ஆகும் வரை கிளறிவிட்டு பின்பு இறக்கவும். 
சுலபமான வாழைக்காய் புளி வறுவல் ரெடி.

No comments:

Post a Comment