Monday, January 2, 2012

காலிஃபிளவர் பால் கறி




தேவையான பொருட்கள்
  • காலிஃபிளவர்  -  சிறியதாக ஒரு  பூ
  • வெங்காயம்  -ஒன்று
  • பச்சைமிளகாய்  -   2
  • மஞ்சள்த்தூள்  - 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்  - 1/2 ஸ்பூன்
  • தேங்காய்துருவல்   -  தேவைக்கேற்றவாறு
  • உப்பு - தேவைக்கேற்றவாறு
  • எண்ணெய்   -3 ஸ்பூன்
  • கடுகு -  3 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • கடலைபருப்பு  _ 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை _ ஒரு கொத்து
  • சோம்பு - 1 ஸ்பூன்   
  • பூண்டு - 2 பல்
செய்முறை
  1. முதலில் தேங்காய், சோம்பு, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். 
  2. காலிஃபிளவரை  நன்றாக கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.
  3. வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பின்னர்  கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை , கடலை பருப்பு சேர்க்கவும், பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து வதக்கவும்.
  5. பின்னர் உப்பு சேர்க்கவும்.
  6. அதன் பின்பு, காலிஃபிளவரை சேர்த்து நன்கு கிளறவும்.
  7. கடைசியாக அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

No comments:

Post a Comment