தேவையான பொருட்கள்
- ரவை (200கிராம் ) - 1 கப்
- அரிசி மாவு (160 கிராம்) - 1 கப்
- மைதா - 2 ஸ்பூன் -
- பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
- தயிர் - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மிளகு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெரிய வெங்காயம் - 1
- உப்பு - தேவைக்கேற்ப
- கொத்தமலைத் தழை - சிறிதளவு
- ஒரு பாத்திரத்தில் ரவை , அரிசி மாவு , மைதா, இஞ்சி, தயிர், பச்சை மிளகாய் , மிளகு , கறிவேப்பிலை , உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதிக அளவு தண்ணீர் சேர்த்து மாவினை நீர்க்க கரைத்து , 1/2 மணி நேரம் ஊற விடவும்.
- 1/2 மணி நேரம் கழித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். மீண்டும் மாவினை தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் தோசை கல்லை போட்டு , காய்ந்தவுடன் , மாவை கல்லில் விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு , கொத்தமல்லித்தழை தூவி , மிதமான தீயில் வகை வைத்து மொறு மொறுப்பாக எடுத்தால் ரவா தோசை ரெடி.
No comments:
Post a Comment