Wednesday, May 4, 2011

பருப்பு உருண்டை குழம்பு



தேவையான பொருள்கள் :

உருண்டைக்கு
  • கடலை பருப்பு - 1 கப்
  • துவரம் பருப்பு - 1 கப்
  • சோம்பு - 1 டீஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் 
  • பெரிய வெங்காயம் - 2
  • உப்பு - தேவையான அளவு
குழம்புக்கு : 
  • சின்ன வெங்காயம் - 15
  • தக்காளி - 2
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • சோம்பு - 1/2 டீஸ்பூன் 
  • சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்) - 1 டேபிள் ஸ்பூன் 
  • கடுகு - 1/2 டி ஸ்பூன் 
  • வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 
  • பூண்டு - 5 பல் 
  • கறிவேப்பிலை - 1 கொத்து 
  • புளி - நெல்லிக்காய் அளவ
செய்முறை : 
  •  சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  •  கடலை பருப்பை  மற்றும் துவரம் பருப்பை நன்றாக கழுவி   இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில்   காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு  சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்  பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.
  •  கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை  வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து  நன்றாக வதக்கி ஆற விடவும்.
  •  நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து  மிக்ஸ்யில் அரைக்கவும். 
  • அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து   கொள்ளவும்.
  • மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  •  பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான   தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும்  கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

Sunday, May 1, 2011

வெஜிடபுள் பிரியாணி

தேவையானவை
    • வெங்காயம் -2
    • தக்காளி - 3
    • பூண்டு- 6பல்
    • இஞ்சி - 1 துண்டு
    • புதினா - ஒரு கைப்பிடி
    • கறிவேப்பில்லை - ஒரு கைப்பிடி
    • கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    • எண்ணெய் - 1 குழி கரண்டி 
    • நெய் - 1 ஸ்பூன் 
    • பச்சை மிளகாய்  - 2
    • கேரட்
    • பீன்ஸ்
    • காலி பிளவர் 
    • குடை மிளகாய்
    • உருளை கிழங்கு
    • பச்சை பட்டாணி - 1 கப் 
    • மீள் மேக்கர் - 1 கைப்பிடி
    • பட்டை
    • லவங்கம்
    • பிரிஞ்சி இலை  
    • கச கச
    • பாஸ்மதி அரிசி - 2 கப் 
    • மஞ்சள் தூள் -1 ஸ்பூன் 
    • கரம்மசாலா - 1 ஸ்பூன்
    • உப்பு - தேவைகேற்ப
    • எழுமிச்சம் பழம் - 1/2 
    • தயிர் - 2 ஸ்பூன் 
      செய்முறை

      1. முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும்.
      2. பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய வைத்து பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, அத்துடன் வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
      3. பிறகு, நறுக்கிய காய்கறிகளை அத்துடன் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
      4.  காய்கறி நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, தயிர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
      5. அடுத்து ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் அதில் சேர்க்க வேண்டும். 
      6. பின்னர், குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான வெஜிடேபிள் பிரியாணி தயார்.