தேவையானவை
- கத்திரிக்காய் - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- எண்ணெய் - தாளிப்பதற்கு
- கடுகு - தாளிப்பதற்கு
- உளுத்தம் பருப்பு - தாளிப்பதற்கு
- கறிவேப்பில்லை - 1 கொத்து
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவைகேற்ப
- தேங்காய் - 1/4 கப்
- கடாயில் என்னை ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்புயை சேர்த்து, கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் உப்பையும் தேவைகேற்ப சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய கத்தரிகையை சேர்க்கவும்.
- கத்தரிக்காய் பாதி வதங்கியவுடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து கடாயை மூடவும் .
- காய் வெந்தவுடன் தேங்காயை அதனுடன் சேர்க்கவும்.
சுவையான கத்திரிக்காய் ரெடி. தயிர் மற்றும் சாம்பார் சாதத்திற்கு அருமையானது.
தேவையானவை
- வாழைக்காய் - 1
- எண்ணெய் - தாளிப்பதற்கு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- பூண்டு - 2 பற்கள்
- சோம்பு - 1
- வறமிளகாய் - 1 ஸ்பூன்
- கரம் மசால - 1 ஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு
செய்முறை
- வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பூண்டு, சோம்பு, வறமிளகாய், கரம் மசாலா, புளியை சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும.
- பிறகு வாழைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதக்கியவுடன் அரைத்து வைத்த பேஸ்ட்டை வாழைக்காயுடன் சேர்த்து நன்றாக பிரட்டவும்.
- மிதமான தீயில் 5 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து, பிறகு நன்கு கிளறிவிடவும்.
- காய் பொன்னிறமாக ஆகும் வரை கிளறிவிட்டு பின்பு இறக்கவும்.
சுலபமான வாழைக்காய் புளி வறுவல் ரெடி.
- நல்ல எண்ணெய் – 2½ ஸ்பூன்
- முருங்கை கீரை - 1 கட்டு
- சீரகம் - 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
- கடுகு – ½ ஸ்பூன
- உளுந்தம் பருப்பு – 1½ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (பெரியது)
- கறிவேப்பிலை - சிறிதளவு
- தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை
- முதலில் முருங்கைக் கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
- அலசிய முருங்கைக் கீரையைப் போட்டு அதனுடன் சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, ஊளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
- தண்ணீர் வற்றி முருங்கைக் கீரை சுருள வதங்கியதும் அடுப்பினை அணைத்து விடவும்.
- அதனுடன் துருவிய தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி விடவும்.
சுவையான முருங்கைக் கீரை பொரியல் தயார்.
உடலில் உள்ள இரும்பு சத்தின் அளவை அதிகப்படுத்தி கொடுக்கும் .
தேவையானவை
- வாழைத்தண்டு - 1 அடி
- வெங்காயம் - 1
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவைக்கேற்றவாறு
- மஞ்சள் தூள் - 1ஸ்பூன்
- தேங்காய் பூ - சிறிதளவு
செய்முறை
- வாழைத்தண்டு முதலில் பொடியாக நறுக்கி கொண்டு , கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , உளுத்தம் பருப்பு , காய்த்த மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும் .
- பின் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டுடன் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கவும்.
- வாழை தண்டு வெந்து முற்றிலும் தண்ணீர் வற்றிய பிறகு தேங்காய் பூ சேர்த்து வதக்கி இறக்கினால் வாழை தண்டு பொரியல் தயார் .
சிறுநீரக கற்கள் விரைவில் கரையும்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 20 பல்
- பூண்டு - 20 பல்
- தக்காளி - 1
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு
- நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- வெல்லம் - ஒரு சிறு துண்டு
தாளிக்க :
- கடுகு -
1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு
- வெந்தயம் - 1 /2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
- கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- அதன் பிறகு மஞ்சள்தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- புளி கரைசல் கெட்டியாக சேர்த்து கொதிக்க விடவும்.
- இறுதியாக வெல்லம் ஒரு சிறு துண்டு சேர்த்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- தக்காளி - 3 (அரைத்தது)
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்
- 1 டேபிள்
ஸ்பூன்
செய்முறை
- முதலில் காராமணியை வேகவைத்து
கொள்ள வேண்டும் .
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
- பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
- பின்னர் வேக வைத்துள்ள
காராமணியை லேசாக மசித்து, வாணலியில் ஊற்றி, சற்று கெட்டியான
கிரேவி போன்று வரும்
போது இறக்கி வைக்க
வேண்டும்.