தேவையான பொருட்கள்
- மைதா - 1 கப்
- தயிர் - 1கப்
- அரிசி மாவு - 1 கப்
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 3
- உப்பு - தேவைக்கேற்ப
- சீரகம்
- கறிவேப்பிலை
- சோடா உப்பு
- எண்ணெய்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து அதனுடன் சீரகம், கறிவேப்பிலை இஞ்சி, பச்சை மிளகாய் , உப்பு மற்றும் சோடா உப்பு சேர்க்க வேண்டும்.
- கடைசியாக தயிர் 1 கப் சேர்த்து நன்கு பிசையவும் . தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து உளுந்தம் மாவு பதத்திற்கு பிசையவும்.
- அரை மணி நேரம் இக்கலவையை ஊற வைக்க வேண்டும் தயிர் மற்றும் சோடா உப்பு , போண்டாவிற்கு மென்மையைக் கொடுக்கும்.
- எண்ணெய் காய்ந்ததும், தீயில் இதை எலுமிச்சம் பழம் அளவிற்கு உருட்டி போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment