தேவையானபொருட்கள்
- கொத்தமல்லி தழை - 1 கட்டு
- சின்ன வெங்காயம் - 150 கிராம்
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- உளுந்தம் பருப்பு - 50 கிராம்
- துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி
- சமையல்எண்ணெய் – தாளிக்க
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - தாளிக்க தேவையான அளவு
- கருவேப்பில்லை - 5 இலைகள்
- வரமிளகாய் - 5 முதல் 7
- கொத்தமல்லி தழையை நன்கு அலசவும்.
- வாணலியை அடுப்பில் வைக்கவும்.
- வாணலியில் சமையல் எண்ணையை உற்றி உளுந்தம் பருப்பு , கொத்தமல்லிதழையை சேர்த்து வதக்கவும்.
- பிறகு துருவிய தேங்காயை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- இக்கலவை நன்கு ஆறியவுடன் புளி உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- கடைசியாக கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் கொத்தமல்லி சட்னி ரெடி.
இட்லி மற்றும் தோசைக்கு நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment