Monday, January 2, 2012

பாகற்காய் வறுவல்




தேவையான பொருள்கள் 
  • பாகற்காய் - 250 கிராம் 
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணைய் - தேவையான அளவு 
  • கடுகு 
  • உளுத்தம் பருப்பு 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

  1. பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்.
  2. நறுக்கிய பாகற்காயை உப்பு சேர்த்து அரைமணி நேரம் ஊற விடவும்.
  3. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , கடுகு உளுந்து  கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. அதனுடன் பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கவும் . 
  5. அதில் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து வேக  விடவும். 
  6. பொன்னிறமாக வரும் வரை  வறுத்து  எடுக்கவும்.  
சுவையான பாகற்காய் வறுவல் தயார். 


No comments:

Post a Comment