தேவையான பொருள்கள்
- பாகற்காய் - 250 கிராம்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணைய் - தேவையான அளவு
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
- பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்.
- நறுக்கிய பாகற்காயை உப்பு சேர்த்து அரைமணி நேரம் ஊற விடவும்.
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கவும் .
- அதில் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து வேக விடவும்.
- பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும்.
No comments:
Post a Comment