Thursday, March 28, 2019

ஜவ்வரிசி வடகம்





தேவையான பொருட்கள் 
  • ஜவ்வரிசி - 1/2 கிலோ 
  • பச்சைமிளகாய் - 15 (தேவையான அளவு )
  • பூண்டு - 5 பல்
  • பெருங்காயம் - 1 சிட்டிகை  
  • உப்பு - தேவையான அளவு 
  • எலுமிச்சை பழம் - 1 
செய்முறை 
  1. முதலில் ஜவ்வரிசியை இரவு முழுவதும்  ஊற வைக்கவேண்டும் .




2 . மறு நாள் காலையில் குக்கர் ஒன்றில்  1 1/2 லிட்டர்  தண்ணீர்  ஊற்றி  7 முதல் 8 விசில்  வரும் வரை வைக்க வேண்டும் . 

3. மிஸ்யில் பச்சை மிளகாய் , பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும் .





4. பிரஷர் அடங்கியதும் அரைத்த விழுதினை ஜவ்வரிசியடன் சூட்டோடு சேர்த்து நன்கு கிளற வேண்டும். 
5 .பிறகு ஜவ்வரிசி ஆறியவுடன் மிஸ்யில் தண்ணீர் விடாமல்  கூழ்  போல அரைத்து கொள்ளவும். 
6. அதன்பிறகு  இறுதியாக எலுமிச்சை பழம் ஒன்றை அதனுடன் பிழிந்து  நன்றாக கலந்து கொள்ளவும்.
7. பிளாஸ்டிக் கவர் ஒன்றில்  மேலே  வீடியோவில் உள்ளது போன்று  சிறிய ஸ்பூன் ஒன்றில் வடகமாக இட்டு வெயிலில் நன்கு காய விடவும் .  

8. ஸ்பூன்னை தண்ணீரில் நனைத்து கொண்டால் ஒட்டாமல்  வடகம் தேய்க்க வரும். 












Wednesday, March 27, 2019

திணை அரிசி உப்புமா


தேவையான பொருட்கள்
  • திணை அரிசி - 1/2 கப் 
  • வெங்காயம் - 1 
  • பச்சை மிளகாய் - 1 
  • மஞ்சள் தூள் - சிறிது 
  • உப்பு -  தேவையான அளவு 
  • எண்ணெய்  - 2 ஸ்பூன் 
  • கேரட் -1
  • பீன்ஸ் - 3
தாளிக்க 
  • கடுகு 
  • உளுத்தம்பருப்பு 
  • கடலை பருப்பு 
  • பெருங்காயம்  
  • கறிவேப்பிலை - 1 கொத்து 
செய்முறை 
  1. திணை அரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் , தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து, நறுக்கிய  வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு,  மஞ்சள் தூள் ,மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் 1, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. நன்றாக கொதிக்க துவங்கியதும் , தினை அரிசியை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
  5. அரிசி கொதிக்க துவங்கியதும் மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு மூடி வைக்கவும்.
சத்தான தினை அரிசி உப்புமா ரெடி ! 


சிகப்பு சோளம் அடை



தேவையான பொருட்கள் 
  • சிகப்பு சோளம் - 1 கப் 
  • புழுங்கல் அரிசி - 1/2 கப் 
  • துவரம் பருப்பு - 1/2 கப் 
  • கடலைப் பருப்பு - 1/4 கப் 
  • வரமிளகாய் -5
  • சோம்பு -1 ஸ்பூன் 
  • பூண்டு - 5 பல் 
  • பெருங்காயம் - 1 சிட்டிகை 
  • உப்பு - தேவையான அளவு 
  • சீரகம் - 1 ஸ்பூன் 
  • மஞ்சள்த் தூள் - 1 சிட்டிகை 
செய்முறை 
  1. சிகப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை தண்ணீர்  ஊற்றி 3 மணி நேரம் ஊற  வைக்கவும்.
  2. ஊறியதை தண்ணீர் வடித்து சோம்பு , வரமிளகாய் , பூண்டு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் .
  3. அரைத்த மாவுடன் சீரகம்,  மஞ்சள்த்தூள் சேர்த்து கரைக்கவும்.
  4. கரைத்து வைத்திருக்கும் மாவினை மெல்லிய அடைகளாக வார்க்கவும். சுற்றிலும் என்னை ஊற்றி வேகவிட்டு  எடுக்கவும்.

சுவையான சிகப்பு சோள தோசை ரெடி . 

Tuesday, March 26, 2019

கம்பு ரொட்டி




தேவையான பொருட்கள் 

  • கம்பு மாவு - ஒரு கப்
  • கோதுமை மாவு - கால் கப்
  • நறுக்கிய பச்சைமிளகாய் - 2
  • சீரகம் - அரை டீஸ்பூன்
  • மாங்காய்ப்பொடி - அரை டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • நெய்  - தேவையான அளவு
செய்முறை 
  1.  நெய் தவிர பிற பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 
  2.  தோசைக்கல்லை சூடாக்கி , மாவினை ரொட்டிகளாக தட்டி , நெய் விட்டு இரு புறமும் வேக  விட்டு எடுத்தால் , சுவையான கம்பு ரொட்டி ரெடி.  

வெண்டைக்காய் மோர் குழம்பு







தேவையானவை
  • வெண்டைக்காய் - 10
  • புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி 
  • காய்ந்த மிளகாய் - 2
  • தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்
  • மிளகு- ஒரு டீஸ்பூன்
  • தனியா- ஒரு டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு- ஒரு டீஸ்பூன்
  • கடுகு- ஒரு டீஸ்பூன்
  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை  
  • வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.  
  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். 
  • இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும். 
  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.


கடலை மிட்டாய்




தேவையான பொருட்கள் 
  • வேர்க்கடலை - 1 கப் (வறுத்து உடைத்து)
  • வெல்லம்  - 1 கப் 
  • ஏலத்தூள் - 1/2 ஸ்பூன் 
செய்முறை 
  • முதலில் வெல்லத்தை பாகு காய்ச்சவும் .
  • கம்பி பதத்திற்கு முன்பாகவே கடலை மற்றும் ஏலக்காய்த் தூள் சிறிது சிறிதாக சேர்த்து நெய் விடவும்.
  • நெய் தடவிய தட்டில் அதனை அப்படியே கொட்டி , ஆறியவுடன் துண்டங்களாகப்  போடவும்.

Monday, March 25, 2019

வேர்க்கடலை சட்னி


தேவையான பொருட்கள் 
  • வேர்க்கடலை - 3/4 கப் 
  • சின்ன வெங்காயம் - 10
  • வர மிளகாய் - 2
  • பூண்டு- 2 பற்கள் 
  • புளி - 1 சிறு துண்டு 
  • உப்பு - தேவையான அளவு 
தாளிப்பதற்கு 
  • நல்லெண்ணெய் - 2 ஸ்பூன் 
  • கடுகு - 1/2 ஸ்பூன் 
  • உளுத்தம்பருப்பு -1/4 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை 
  • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை 
செய்முறை 
  • முதலில் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து எடுத்து அதன் தோலை  நீக்கி கொள்ளவும்.
  • பின்னர் வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , அதில் வெங்காயம் , பூண்டு, வர மிளகாய், மற்றும் புளி  சேர்த்து பொன்னிறமாக வதக்கி குளிர வைக்க வேண்டும்.
  • பிறகு மிஸ்யில் வதக்கிய கலவை மற்றும் , வேர்க்கடலை சேர்த்து , சிறிது தண்ணீர் ஊற்றி , உப்பு போட்டு  அரைத்து கொள்ள வேண்டும். 
  • இறுதியாய் தாளித்து , அரைத்து வைத்துள்ள சட்னியில்  ஊற்றி கலந்தால் , வேர்க்கடலை சட்னி ரெடி.

கேரட் சட்னி



தேவையான பொருட்கள் 
  • கேரட் - 4 துருவியது 
  • சின்ன வெங்காயம் - 8 
  • வர மிளகாய் - 2
  • கடலை பருப்பு - 1 ஸ்பூன் 
  • புளி - 1 ஸ்பூன் 
  • இஞ்சி - 1 ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
தாளிப்பதற்கு 
  • எண்ணெய் - 1 ஸ்பூன் 
  • கடுகு - 1/2 ஸ்பூன் 
  • உளுத்தம்பருப்பு  - 1 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிது 
  • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை 
செய்முறை 
  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து , 1 ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி  காய்ந்ததும் , கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும். 
  • பிறகு மற்றோரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் , கடலை பருப்பு , வர மிளகாய் , புளி  மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.  
  • பின்பு வதக்கி வைத்துள்ள பொருட்கள் குளிர்ந்ததும்,  அவற்றை மிஸ்யில் போட்டு அத்துடன்,  உப்பு, இஞ்சி, மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து  தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும் .
  • பிறகு தாளிப்பதற்கு  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு , உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை , மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்க்க வேண்டும்.
 

Sunday, March 24, 2019

கம்பு தோசை



தேவையான பொருட்கள் 

  • கம்பு  - 1 கப் 
  • அரிசி - 1/2 கப் 
  • உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
  • இஞ்சி - 1 
  • பச்சை மிளகாய் - 2 
  • சின்ன வெங்காயம் - சிறிதளவு 
  • கறிவேப்பிலை 
  • எண்ணெய் 
  • உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
  1. முதலில் கம்பு , அரிசி , உளுத்தம் பருப்பினை , 4 மணி நேரம் ஊற  வைத்து இட்லி மாவு பதத்திற்கு ஆட்டி கொள்ளவும். 
  2.  அதன் பின் அரைத்த  மாவினை புளிக்க வைக்க வேண்டும் .
  3.  மாவுடன் பச்சை மிளகாய்,  இஞ்சி, கறிவேப்பிலை, சேர்க்கவும்.
  4. பிறகு தோசைக் கல்லை சூடாக்கி,  பொன்னிறமாக தோசைகளை ஊற்றி எடுக்கவும்.  

ரவா தோசை




தேவையான பொருட்கள் 

  •  ரவை (200கிராம் ) -  1 கப்  
  •  அரிசி மாவு (160 கிராம்) - 1 கப்
  •  மைதா - 2 ஸ்பூன் - 
  • பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன் 
  • தயிர் - 2 ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகு - 1/2 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • பெரிய வெங்காயம் - 1 
  • உப்பு - தேவைக்கேற்ப  
  • கொத்தமலைத் தழை -  சிறிதளவு 
செய்முறை 

  1. ஒரு பாத்திரத்தில் ரவை , அரிசி மாவு , மைதா, இஞ்சி, தயிர்,  பச்சை மிளகாய் , மிளகு , கறிவேப்பிலை , உப்பு  சேர்த்து நன்கு கலக்கவும். 
  2. அதிக அளவு தண்ணீர் சேர்த்து மாவினை நீர்க்க கரைத்து , 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  3.  1/2 மணி நேரம் கழித்து  பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.  மீண்டும் மாவினை தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து கொள்ளவும். 
  4.  பிறகு அடுப்பில் தோசை கல்லை போட்டு , காய்ந்தவுடன் , மாவை கல்லில் விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு , கொத்தமல்லித்தழை தூவி , மிதமான  தீயில் வகை வைத்து மொறு மொறுப்பாக எடுத்தால் ரவா தோசை ரெடி. 

Saturday, March 23, 2019

ரச வடை




தேவையான பொருட்கள் 
  • மிளகு ரசம் - 4 கப் 
  • உளுத்தம் பருப்பு - 250 கிராம் 
  • பச்சை மிளகாய் - 6
  • கடலை பருப்பு - 50 கிராம் 
  • எண்ணெய்  - 300 கிராம் 
  • இஞ்சி - 1/4 இன்ச் 
செய்முறை 

  • உளுந்தம் பருப்பையும்கடலை பருப்பையும் ஊற வைத்து களைந்து இஞ்சிபச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
  • எண்ணெய் காய்ந்ததும் வடைகளைப் பொரித்து எடுத்து சூடாக ரசத்தில் போடவும்
  • மிளகு ரசம் அல்லது மைசூர் ரசம் தான் இதற்கு சரியாக இருக்கும்
  • சிறிது ஊறியவுடன் வடைகளை வெளியே எடுத்து தட்டில் அடுக்கவும்.




மைசூர் போண்டா




தேவையான பொருட்கள் 
  • மைதா - 1 கப் 
  • தயிர் - 1கப்
  • அரிசி மாவு - 1 கப் 
  • இஞ்சி - 1 துண்டு 
  • பச்சை மிளகாய் - 3
  • உப்பு - தேவைக்கேற்ப 
  • சீரகம் 
  • கறிவேப்பிலை 
  • சோடா உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை 
  1.  ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து அதனுடன் சீரகம்கறிவேப்பிலை   இஞ்சி,  பச்சை மிளகாய் , உப்பு மற்றும் சோடா உப்பு சேர்க்க வேண்டும்
  2. கடைசியாக தயிர் 1 கப் சேர்த்து நன்கு பிசையவும்தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து உளுந்தம் மாவு பதத்திற்கு பிசையவும்
  3. அரை மணி  நேரம் இக்கலவையை  ஊற  வைக்க வேண்டும் தயிர் மற்றும் சோடா உப்பு , போண்டாவிற்கு மென்மையைக் கொடுக்கும்
  4. எண்ணெய் காய்ந்ததும்தீயில்  இதை எலுமிச்சம் பழம் அளவிற்கு உருட்டி போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும்
தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட  சுவையாக இருக்கும்.  

Friday, March 22, 2019

வெண்பூசணி அல்வா



தேவையான பொருட்கள் 

  • பூசணிக்காய் - 3 கீற்று 
  • சர்க்கரை - 100 கிராம் 
  • அரிசி - 1/2 கப் 
  • நெய் - 100 கிராம் 
  • ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன் 
  • கோவா - 50 கிராம் 
  • ரோஸ் எஸென்ஸ் - 1/2 ஸ்பூன் 
செய்முறை

  1. பூசணிக்காயை தோல், விதை நீக்கி துண்டுகளாக்கி மிஸ்யில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. அதை வடிகட்டி நீர் வேறாகவும்  விழுது வேறாகவும் பிரிக்கவும். 
  3. சர்க்கரையை கனமான பாத்திரத்தில் பூசணிக்காய் நீரோடு சேர்த்து கிளறவும்.
  4. அரைக் கப் அரிசியை கழுவி சிறிது ஊற வைத்து மிஸ்யில் பால் விட்டு கெட்டியாக அரைக்கவும். 
  5. பூசணி விழுது, அரிசி மாவு, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பிசையவும்.
  6. சர்க்கரை ஓற்றைக் கம்பி பாகு வந்ததும் இந்தக் கலவையைச் சேர்த்து கைவிடாமல் சுருண்டு வரும்வரை கிளறவும். 
  7. பாலில் சிறிது கேசரிப் பவுடர், ரோஸ் எஸென்ஸ் சேர்த்து இதில் கலந்து , கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டிச் சிறிது ஆறியதும் துண்டு போடவும். 
  8. நெய்யில் பொரித்த முந்திரியும் திராட்சையும் சேர்க்கவும். 

சுவையான வெண் பூசணி அல்வா  ரெடி.

ரவா லட்டு



தேவையான பொருட்கள்

  • ரவை - 100 கிராம் 
  • சர்க்கரை - 100 கிராம் 
  • முந்திரி - 20 
  • திராட்சை - 4 ஸ்பூன் 
  • தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் 
  • ஏலம் - 6
  • நெய் - 100 கிராம் 

செய்முறை 

  • நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து எடுத்துவிட்டு ,  ரவையை  நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • பின்பு தேங்காய் துருவலை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
  • எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இதனோடு சர்க்கரையை பொடி செய்து கலக்கவும். 
  • நன்றாகக் கலந்து பாலை சூடு செய்து ஊற்றி கிளறி உருண்டைகளாக பிடிக்கவும்.  


Tuesday, March 19, 2019

பாலக்கீரை மசியல்


தேவையான பொருட்கள் 
   பாலக்கீரை - 1 கட்டு 
   சின்ன வெங்காயம் - 10 
   தக்காளி - 3 
   மஞ்சள் தூள் - 1சிட்டிகை 
   தூள் உப்பு - தேவைக்கேற்ப 
   சாம்பார் பொடி  - 1 ஸ்பூன் 
  தாளிக்க : 
  எண்ணெய் 
  கடுகு 
  சீரகம் 
  பெருங்காயம் 

செய்முறை 
  1. முதலில்  பாலக்கீரையை  தண்டுகள் நீக்கி இலைகளை மட்டும் தனியாக பிரித்து எடுத்து கொள்ள வேண்டும் .
  2. பிறகு குக்கர் ஒன்றில் பாலக்கீரையை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும். 
  3. வெந்த கீரையை நன்கு மசித்து கொள்ள வேண்டும் .
  4. வாணலியில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயம்  சேர்த்து பொரிய விடவும்.
  5. அதனுடன் சின்ன வெங்காயம், அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பிறகு  உப்பு , சாம்பார் பொடி , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 
  7. அத்துடன் மசித்த பாலக்கீரையை சேர்த்து நன்கு வதக்கி,  கொதிக்க விடவும்.
சுவையான பாலக்கீரை மசியல் தயார். 
பயன்கள் 
  • இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. 
  • இரத்த சோகையுள்ளவர்கள், இதனை உட்கொள்வதால் சரிசெய்யமுடியும்.
  • இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது
  • பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.
  • பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவில் உள்ளது. 
  • பாலக்கீரை புற்றுநோயைத் தடுக்கும். 
  • குளிர்ச்சித்தன்மை கொண்டது.

Thursday, March 14, 2019

கொத்தமல்லி சட்னி



          தேவையானபொருட்கள்  
  •      கொத்தமல்லி தழை - 1 கட்டு
  •      சின்ன வெங்காயம் -  150 கிராம்
  •      புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  •      உளுந்தம்  பருப்பு - 50 கிராம் 
  •     துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி
  •     சமையல்எண்ணெய் – தாளிக்க
  •     உப்பு - தேவையான அளவு
  •     கடுகு - தாளிக்க தேவையான அளவு
  •     கருவேப்பில்லை - 5 இலைகள்
  •     வரமிளகாய் - 5 முதல் 7

          செய்முறை 
  1. கொத்தமல்லி தழையை நன்கு அலசவும்.
  2. வாணலியை அடுப்பில் வைக்கவும்.
  3. வாணலியில்  சமையல் எண்ணையை உற்றி  உளுந்தம் பருப்பு , கொத்தமல்லிதழையை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு துருவிய தேங்காயை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. இக்கலவை நன்கு ஆறியவுடன் புளி உப்பு மற்றும்  தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  6. கடைசியாக கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் கொத்தமல்லி சட்னி ரெடி.

இட்லி மற்றும் தோசைக்கு நன்றாக இருக்கும்.