Tuesday, January 24, 2012

பீர்கங்காய் வறுவல்

தேவையானவை
  • பீர்கங்காய் - 1 
  • மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் 
  • மஞ்சள்தூள் - 1 சிட்டிகை 
  • வெங்காயம் - 1 
  • தக்காளி - 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
தாளிப்பதற்கு
எண்ணெய்
கடுகு 
உளுந்தம்பருப்பு 
கறிவேப்பிலை 

செய்முறை 
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு , கறிவேப்பிலை சேர்க்கவும். 
  • பிறகு வெங்காயம், தக்காளி  சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். 
  • அதனுடன் உப்பு , மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதன் பிறகு பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து  நன்கு வதக்கி மிதமான  தீயில் மூடி வைக்கவும்.
சுவையான பீர்கங்காய் வறுவல் ரெடி. 

Monday, January 2, 2012

பாகற்காய் வறுவல்




தேவையான பொருள்கள் 
  • பாகற்காய் - 250 கிராம் 
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணைய் - தேவையான அளவு 
  • கடுகு 
  • உளுத்தம் பருப்பு 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

  1. பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்.
  2. நறுக்கிய பாகற்காயை உப்பு சேர்த்து அரைமணி நேரம் ஊற விடவும்.
  3. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , கடுகு உளுந்து  கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. அதனுடன் பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கவும் . 
  5. அதில் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து வேக  விடவும். 
  6. பொன்னிறமாக வரும் வரை  வறுத்து  எடுக்கவும்.  
சுவையான பாகற்காய் வறுவல் தயார். 


காலிஃபிளவர் பால் கறி




தேவையான பொருட்கள்
  • காலிஃபிளவர்  -  சிறியதாக ஒரு  பூ
  • வெங்காயம்  -ஒன்று
  • பச்சைமிளகாய்  -   2
  • மஞ்சள்த்தூள்  - 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்  - 1/2 ஸ்பூன்
  • தேங்காய்துருவல்   -  தேவைக்கேற்றவாறு
  • உப்பு - தேவைக்கேற்றவாறு
  • எண்ணெய்   -3 ஸ்பூன்
  • கடுகு -  3 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • கடலைபருப்பு  _ 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை _ ஒரு கொத்து
  • சோம்பு - 1 ஸ்பூன்   
  • பூண்டு - 2 பல்
செய்முறை
  1. முதலில் தேங்காய், சோம்பு, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். 
  2. காலிஃபிளவரை  நன்றாக கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.
  3. வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பின்னர்  கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை , கடலை பருப்பு சேர்க்கவும், பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து வதக்கவும்.
  5. பின்னர் உப்பு சேர்க்கவும்.
  6. அதன் பின்பு, காலிஃபிளவரை சேர்த்து நன்கு கிளறவும்.
  7. கடைசியாக அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.