Saturday, July 9, 2011

பூண்டு குழம்பு




தேவையான பொருட்கள்
  • சின்ன வெங்காயம் - 20 பல்  
  • பூண்டு - 20 பல் 
  • தக்காளி - 1
  • மல்லித்தூள் - 2 ஸ்பூன் 
  • மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
  • புளி - நெல்லிக்காய் அளவு 
  • நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி 
  • வெல்லம் - ஒரு சிறு துண்டு 
தாளிக்க :
  • கடுகு - 1 ஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு 
  • வெந்தயம் - 1 /2 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
  1.  கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச்  சேர்த்து தாளிக்கவும். 
  2. பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. அதன் பிறகு மஞ்சள்தூள்,  மிளகாய் தூள் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  4. புளி கரைசல் கெட்டியாக சேர்த்து கொதிக்க விடவும்.
  5. இறுதியாக வெல்லம் ஒரு சிறு துண்டு சேர்த்து கொள்ளவும். 


Thursday, July 7, 2011

ராஜ்மா கிரேவி


தேவையான பொருட்கள் 
  • வெங்காயம் - 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • தக்காளி - 3 (அரைத்தது)
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை - 1
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் காராமணியை வேகவைத்து கொள்ள வேண்டும் .
  2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்துஅதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  3. பின்பு அரைத்த வெங்காயம்இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
  4. பிறகு மிளகாய் தூள்கரம் மசாலாசீரகப் பொடிமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறிபின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றிதேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  5. பின்னர் வேக வைத்துள்ள காராமணியை லேசாக மசித்துவாணலியில் ஊற்றிசற்று கெட்டியான கிரேவி போன்று வரும் போது இறக்கி வைக்க வேண்டும். 

Tuesday, July 5, 2011

வெண் பொங்கல்





தேவையான பொருட்கள்
  • பச்சை அரிசி - 3/4 கப்
  • பாசிப்பருப்பு  - 1/4 கப்
  • தண்ணீர் - 4 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • நெய்  - 1/2 டீஸ்பூன்
  • மிளகு  - 2 டீஸ்பூன்
  • முந்திரி  - 15
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • இஞ்சி - 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை
  1. முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  2. வறுத்த பாசிப்பருப்பும், அரிசி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய், கடுகு, சீரகம், மிளகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். 
  4. இதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து தண்ணீர், உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து நெய் விட்டு வறத்த முந்திரியை இதில் போட்டு கிளறி விடவேண்டும்.
  5. ருசியான வெண்பொங்கல் தயார்.இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.
வெண்பொங்கலுக்கு தேங்காய் சட்னி,  சாம்பார் சுவையாக இருக்கும்.