தேவையானபொருட்கள்
- பாஸ்மதி அரிசி - 1 கப்
- சீரகம் - 11/2 டீஸ்பூன்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
- முந்திரிப் பருப்பு - 10
- நெய் - 2 டேபிள்ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- பட்டை - 1 துண்டு
- உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
- தேங்காய்ப்பால் - 1 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
- வெங்காயத்தை நறுக்கி கொ்ளவும்.
- பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
- பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
- முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் நெய்யை சூடாக்கி அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.
- பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
- பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசியையும் வதக்கி தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு சேர்த்து 1 முதல் 2 விசில் வரை வேக விடவும்.
- பின் குக்கரைத் திறந்து வறுத்து வைத்துள்ள முந்திரி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
தேவையானபொருட்கள்
- பெரிய வெங்காயம் -1
- எண்ணெய் - தாளிப்பதற்கு
- கடுகு , உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
- பட்டை ,கிராம்பு
- பச்சை மிளகாய் - 1 பூண்டு - 3 பல்
- சோம்பு - சிறிதளவு
- தக்காளி - 1
- தேங்காய் துருவல்
- பெரிய உருளை கிழங்கு - 2
- உப்பு - தேவைகேற்ப
- மஞ்சள்தூள் - சிறிதளவு
செய்முறை
- தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு போன்றவற்றை நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.
- வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
- அரைத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- இறுதியாக உருளைகிழங்கை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- கொதித்தவுடன் பரிமாற உருளைகிழங்கு பால்கறி ரெடி.
தேவையானபொருட்கள்
- வெங்காயம் நறுக்கியது - 1/2 கப்
- புளித்த இட்லி மாவு - 4கப்
- பச்சைமிளகாய் நறுக்கியது - இரண்டு
- கடுகு சீரகம் கலந்தது - ஒரு தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
- கடலை பருப்பு - இரண்டு தேக்கரண்டி
- கொத்தமல்லி நறுக்கியது - ஒரு மேசைக்கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
- வெங்காயம் நறுக்கியது - அரைக்கோப்பை
- பச்சைமிளகாய் நறுக்கியது - இரண்டு
- கடுகு சீரகம் கலந்தது - ஒரு தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
- கடலை பருப்பு - இரண்டு தேக்கரண்டி
- கொத்தமல்லி நறுக்கியது - ஒரு மேசைக்கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் , உளுந்தம் பருப்பு கடலை பருப்பை லேசாக சிவக்க வறுக்கவும்.
- பிறகு வெங்காயம் , கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- இதனை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- குழி பணியார சட்டியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு முக்கால் அளவு மாவினை ஊற்றவும்.
- பிறகு மெல்லிய கம்பியில் பணியாரத்தை திருப்பி விடவும்.
- திருப்பிய பக்கமும் சிறிது எண்ணெய் விடலாம் வேண்டுமானால் இரு புறமும் நன்றாக சிவக்க எடுத்தால் கார பணியாரம் ரெடி.
- ரவை -100 கிராம் (ஒரு பங்கு)
- சர்க்கரை - 100 கிராம் (ஒரு பங்கு)
- தண்ணீர் - முன்று பங்கு
- முந்திரி - தேவையானவை
- நெய் - தேவையானவை
- கேசரி பவுடர் - தேவையானவை
செய்முறை
- முதலில் ரவையை லேசாக வறுத்து கொள்ளவும்,
- முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்
- கேசரி பௌடரை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்
- பிறகு அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் மற்றும் கரைத்து வைத்துள்ள கேசரி பௌடரை சேர்த்து கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ரவையை சிறிது சிறிதாக கொட்டி ரவா கட்டிகள் ஏற்படாமல் கிளறவும்
- சிறிது நேரம் கழித்து ரவை வெந்தவுடன் சீனியை சேர்த்து கிளறவும்
- சீனி கரைந்து ரவாவுடன் நன்கு சேரும் வரை கிளறிவிட்டு வேகவிடவும்.
- பிறகு முந்திரியை சேர்த்து கிளறவும்
- தேவைகேற்ப நெய் சேர்க்கலாம்.
முந்திரி துண்டங்கள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
- தக்காளி - 8
- பெரிய வெங்காயம் - 4
- பச்சை மிளகாய் - 4
- வரமிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- அரிசி - 2 கப்
- பூண்டு - 5 பல்
- இஞ்சி - தேவைகேற்ப
- பட்டை, கிராம்பு - தேவைகேற்ப
- பிரிஞ்சி இலை - 1
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- நெய் - தேவைகேற்ப
- கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி தழை- 1 கை பிடி
- உப்பு - தேவைகேற்ப
செய்முறை
- சாதத்தை உதிரியாக வடித்துகொள்ள வேண்டும்
- கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை கிராம்பு சேர்த்து கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்
- பிறகு வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- பச்சைமிளகாய் மற்றும் வரமிககை தூள் சேர்த்து வதக்கவும்
- தேவையான உப்பு சேர்க்கவும்
- நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
- பிறகு இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.
- தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.