தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் 1
உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
வரமிளகாய் 3
புளி சிறிதளவு
உப்பு
பூண்டு 2 பல்
சின்ன வெங்காயம் 10
எண்ணெய் 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து, அதனுடன் வரமிளகாய் , பூண்டு , சின்ன வெங்காயம் , புளி, உப்பு, சேர்த்து நனறாக வதக்கவும் அதன்பின் நறுக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கி கொண்டு, நன்கு ஆறிய பின் இக்கலவையை அரைத்து கொள்ளவும் .