தேவையான பொருட்கள்
- திணை அரிசி - 1/2 கப்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கேரட் -1
- பீன்ஸ் - 3
- கடுகு
- உளுத்தம்பருப்பு
- கடலை பருப்பு
- பெருங்காயம்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- திணை அரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் , தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் ,மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் 1, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாக கொதிக்க துவங்கியதும் , தினை அரிசியை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
- அரிசி கொதிக்க துவங்கியதும் மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு மூடி வைக்கவும்.
No comments:
Post a Comment