தேவையான பொருட்கள்
- சிகப்பு சோளம் - 1 கப்
- புழுங்கல் அரிசி - 1/2 கப்
- துவரம் பருப்பு - 1/2 கப்
- கடலைப் பருப்பு - 1/4 கப்
- வரமிளகாய் -5
- சோம்பு -1 ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- சீரகம் - 1 ஸ்பூன்
- மஞ்சள்த் தூள் - 1 சிட்டிகை
- சிகப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறியதை தண்ணீர் வடித்து சோம்பு , வரமிளகாய் , பூண்டு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் .
- அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள்த்தூள் சேர்த்து கரைக்கவும்.
- கரைத்து வைத்திருக்கும் மாவினை மெல்லிய அடைகளாக வார்க்கவும். சுற்றிலும் என்னை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான சிகப்பு சோள தோசை ரெடி .
No comments:
Post a Comment