தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை - 3/4 கப்
- சின்ன வெங்காயம் - 10
- வர மிளகாய் - 2
- பூண்டு- 2 பற்கள்
- புளி - 1 சிறு துண்டு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு -1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை
- பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
- முதலில் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.
- பின்னர் வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , அதில் வெங்காயம் , பூண்டு, வர மிளகாய், மற்றும் புளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி குளிர வைக்க வேண்டும்.
- பிறகு மிஸ்யில் வதக்கிய கலவை மற்றும் , வேர்க்கடலை சேர்த்து , சிறிது தண்ணீர் ஊற்றி , உப்பு போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
- இறுதியாய் தாளித்து , அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றி கலந்தால் , வேர்க்கடலை சட்னி ரெடி.
No comments:
Post a Comment