தேவையானவை
- வெண்டைக்காய் - 10
- புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி
- காய்ந்த மிளகாய் - 2
- தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்
- மிளகு- ஒரு டீஸ்பூன்
- தனியா- ஒரு டீஸ்பூன்
- கடலைப்பருப்பு- ஒரு டீஸ்பூன்
- கடுகு- ஒரு டீஸ்பூன்
- வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
- எண்ணெய்
- உப்பு - தேவையான அளவு
- வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.
- இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.
- வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment