தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- தக்காளி - 3 (அரைத்தது)
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- முதலில் காராமணியை வேகவைத்து
கொள்ள வேண்டும் .
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
- பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
- பின்னர் வேக வைத்துள்ள
காராமணியை லேசாக மசித்து, வாணலியில் ஊற்றி, சற்று கெட்டியான
கிரேவி போன்று வரும்
போது இறக்கி வைக்க
வேண்டும்.
No comments:
Post a Comment